நாடு முழுவதும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய சமீபத்திய ஆய்வில், புழக்கத்தில் உள்ள 194 மருந்துகள் தரம் குறைந்தவை என்றும், 4 மருந்துகள் முற்றிலும் போலியானவை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தம் (High BP), சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அன்றாட பாதிப்புகளுக்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளே இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த மருந்துகளின் விரிவான பட்டியல் CDSCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் போலி மருந்துகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால், மருந்துகளை வாங்கும் போது முறையான மருத்துவர் பரிந்துரை சீட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அட்டையில் உள்ள காலாவதி தேதி (Expiry date) மற்றும் தயாரிப்பு விவரங்களை மிகக் கவனமாகச் சரிபார்த்து வாங்குவது தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகும்.
