திக் திக் திக்… ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட… 19 வயது இளைஞர் பரிதாப பலி… பகீர் பின்னணி என்ன?… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 16, 2026

Spread the love

மேடக் மாவட்டம் நர்சப்பூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்ட 19 வயது சாய் ராம் என்ற இளைஞர் உணவு நச்சுத்தன்மை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜநர்சிம அவர்கள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உணவு மாதிரிகளைப் பரிசோதனை செய்யவும், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

   

இதையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உணவகத்தில் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த உணவகம் முறையான உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அதனைத் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைத்தனர்.