உத்தரகாண்ட் மாநிலம் கோட்டத்வாரின் கமண்ட்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட சிறுவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 வயதான வன்ஷ் சவுகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த வன்ஷ் சவுகானுடன் சென்ற 12 வயதான லக்ஷ்யா என்ற மற்றொரு சிறுவன் படுகாயமடைந்தான். அவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கோட்டத்வாரின் பதாம்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான அபிஷேக் ரவாத் என்ற காரை ஓட்டிவந்த இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
