நள்ளிரவில் வந்த போன் கால்…! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… உறவினர் வீட்டு பின்புறம் கிடந்த சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த போன் காலைத் தொடர்ந்து மாயமாகி, மறுநாள் காலை உறவினர் வீட்டின் பின்புறம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கெய்காட்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை இரவு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற அச்சிறுமிக்கு நள்ளிரவில் கைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரைத் தீவிரமாகத் தேடியுள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் உறவினர் ஒருவரின் வீட்டின் பின்புறத்திலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

   

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் உறவினர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதி என்பதால் குற்றவாளிகள் வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.