வெப் சீரிஸ் பார்த்து 5 மாத ஸ்கெட்ச்.. தந்தை உட்பட 4 பேரை கொடூரமாக தீயிட்டு கொளுத்திய 17 வயது சிறுவன்.. பதறவைக்கும் பின்னணி..!!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள ஸ்ரீராம்பூரா கிராமத்தைச் சேர்ந்த ராம் சிங், தனது தாய், இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இதில் இரண்டாவது மனைவி சுர்ஜின் வந்த பிறகு, ராம் சிங் தனது முதல் மனைவியை அவமதித்து, சரியாகக் கவனிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் 17 வயது மகன், தனது தந்தையைக் கொலை செய்ய முடிவெடுத்தான். இதற்காக கடந்த 5 மாதங்களாக பல்வேறு வெப் சீரிஸ்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கொலை செய்வதற்கான பயிற்சிகளையும், திட்டங்களையும் அந்தச் சிறுவன் ரகசியமாக வகுத்து வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம் சிங்கும் அவரது இரண்டாவது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தபோது, சிறுவன் தன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்தான். அதை எதிர்பாராதவிதமாகப் பார்த்த இரண்டாவது மனைவி சுர்ஜின், அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராம் சிங்கின் தாய் மற்றும் மருமகள் ஆகியோரையும் சிறுவன் அடுத்தடுத்து கொடூரமாகக் கொலை செய்தான். பின்னர், இதற்கு உடந்தையாக இருந்த தனது தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன், நான்கு சடலங்களையும் காரின் பின் இருக்கையில் வைத்து, வீட்டின் அருகே கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து விபத்து போல நாடகமாடியுள்ளான்.

எரிந்த காரைப் பார்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்குச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக முதல் மனைவி கூறிய நிலையில், 17 வயது சிறுவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், தந்தை உட்பட 4 பேரையும் கொலை செய்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான். சிறுவனின் செல்போனை ஆய்வு செய்தபோது கொலை தொடர்பான படங்களை அவன் தொடர்ந்து பார்த்தது உறுதியானது. இந்தத் திட்டமிட்ட படுகொலைச் சம்பவத்திற்காகச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனது தாய் மற்றும் சகோதரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

8 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

8 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

8 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

9 மணத்தியாலங்கள் ago