உலகமே அதிர்ச்சியில்..! இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் பலி…. இதயத்தை நொறுக்கும் காட்சி..!!

Spread the love

ஈரானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று, ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஹார்மோஸ்கான் மாகாணத்தின் மினாப் நகரில் அமைந்துள்ள ‘ஷஜாரே தய்யேபா’ (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் தொடக்கப் பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வகுப்புகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்தக் கோரச் சம்பவத்தில் 6 முதல் 12 வயதுடைய 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 90-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குச் சற்று முன்பாக மாணவிகள் மகிழ்ச்சியுடன் விளையாடிப் பேசிக் கொண்டிருந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது   மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மாணவிகளின் புத்தகப் பைகளையும், உடல்களையும் மீட்கும் காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளன .

இந்தத் தாக்குதலுக்கு ஐநா கல்வி அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய செயல் என்றும் விமர்சித்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஈரானியப் புரட்சிகரப் படைத் தளத்திற்கு அருகிலேயே இப்பள்ளி அமைந்திருந்ததால், இலக்கு தவறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சில சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Soundarya

Recent Posts

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

1 minute ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

6 minutes ago

“என் ஜாதகம் பார்த்தாச்சு”… இனி நடக்கப்போவது இதுதான்…. எதிரிகளை அதிரவைத்த தவெக வேட்பாளர் கனிமொழி….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க…

10 minutes ago

அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரேமலதா… புதிய குண்டை தூக்கிப்போட்ட அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…

17 minutes ago

“10 வருஷம்.. 3 கட்சிகள் தாவி”… நீங்கெல்லாம் எப்படி ஜெயிக்க போறீங்க… குஷ்புவை இழுத்து சுந்தர்.சிக்கு ‘செக்’ வைத்த பிரகாஷ் ராஜ்…!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…

26 minutes ago

“ஏன்டா அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளி-யே இல்லையே!”… ராகுல் சொன்னது ஒன்னு… செல்வம் சொன்னது ஒன்னு…. மேடையிலேயே அரங்கேறிய ‘லைவ்’ காமெடி…!

அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…

37 minutes ago