சண்டிகர் – அம்பாலா தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே விஐபி சாலையில் மெட்ரோ மால் பக்கத்தில் ஜூலை 23ஆம் தேதி அன்று 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு கடத்தப்பட்ட இடத்திற்கு அருகே விட்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இரவு 8 மணி அளவில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கூற்றுப்படி, சலூனில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோ ரிக்ஷாவிற்காக காத்திருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் பயணத்தின் பொழுதே காரில் வைத்து அவரை அடித்து ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பிறகு பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அந்த பெண்ணை அதே இடத்திலேயே மீண்டும் வீசி சென்றுள்ளார்கள். இதனைடுத்து பாதிக்கப்பட்டவரின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
