கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றான். இதனிடையே சிறுவன் தன்னுடைய செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளான். இதன் மூலம் அவனுக்கு வாலிபர்கள் மற்றும் திருமணமான ஆண்களுடன் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் செயலி மூலம் ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பகிர்ந்துள்ளன. ஒரு கட்டத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சிறுவனை வற்புறுத்திய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை கண்ணூர், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
ஆனால் இது பற்றி சிறுவன் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிறுவனின் வீட்டுக்கு ஒருவர் வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுவனின் தாய் வீட்டுக்குள் வந்தபோது அங்கிருந்து ஒருவர் தப்பி சென்றார். இது பற்றி தனது மகனிடம் கேட்டபோது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அழுது கொண்டே கூறியுள்ளான். இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து சிறுவனின் வீட்டுக்கு வந்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி மூலம் சிறுவனுக்கு 14 பேர் அறிமுகமான நிலையில் அதில் 21 முதல் 51 வயது வரை உள்ளவர்களும் திருமணம் ஆகிய குழந்தைகள் உள்ளவர்களும் அடங்குவர். அவர்கள் சிறுவனிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தவறாக நடந்துள்ளன. பல இடங்களுக்கு மாணவனை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அரசு அதிகாரி, போலீஸ் அதிகாரி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரி, ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் என ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். ஐந்து பேர் தலைமறைவாகிய நிலையில் அவர்களை தீவிரமாக தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மூன்று முக்கிய தலைவர்களுமே…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தவெக (தமிழக வெற்றி கழகம்) பெரும்பான்மையான…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. எவ்வித அரசியல் முன் அனுபவமும் இன்றி,…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட…