பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கயாபன்-இ-சிர் சையத், தோக் நாஜு பகுதியில் நடைபெற்ற 12 வயது சிறுமியின் கொடூரமான கொலை வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
வெளியான அந்த வீடியோ காட்சியில், கொடூர குற்றவாளி சிறுமிக்கு பணம் கொடுத்து ஆசை காட்டி தன் வலையில் வீழ்த்துவது மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பணத்தைக் காட்டி ஆசைகாட்டி, அந்தச் சிறுமியைத் தனது அறைக்கு வரவழைத்து அவன் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
https://twitter.com/chsajjad844/status/2108103364307566860/video/1
இந்த அதிர்ச்சி சம்பவ விசாரணையில், சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று படுகொலை செய்த அந்தக் கொடூரன் வேறெவருமல்ல, சிறுமியின் சொந்த தாய்மாமன் தான் என்பது அம்பலமாகியுள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய சொந்த மாமனே சிறுமியை ஆசை காட்டி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
