திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவை சேர்ந்தவர் டீக்கடை நடத்தி வரும் பெரியசாமி. இவருக்கு சத்யா என்ற மனைவியும் தர்ஷனா என்ற மகளும் உள்ளனர். 16 வயதாகும் தர்ஷனா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இப்படியான நிலையில் அவர் பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்ட நீட் முதல் பருவ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனவேதனை அடைந்த தர்ஷனா அதனை பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார்.
நேற்று வீட்டின் மாடிக்கு சென்று படிக்கச் சென்ற தர்ஷனா அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வால் அடுத்தடுத்து தமிழகத்தில் மாணவர்கள் உயிர் சென்று கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இத்தனை உயிர்களை பலி கொடுத்தும் அரசு இதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது தான் மேலும் வேதனை தரும் விஷயம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…