தாத்தா மீது கொண்ட மிதமிஞ்சிய பாசத்தினால் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘அம்மா, அப்பா என்னை மன்னியுங்கள். நான் தாத்தாவை சந்திக்கப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். அருகிலுள்ள மயானத்தின் குளத்தில் நான் இருப்பேன்’. குருகிராமைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நேஹாவின் கடைசி வரிகள் இவை. தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டபோது போலவே, அங்குள்ள குளத்தில் இருந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தாத்தாவின் மறைவால் மன உளைச்சலில் இருந்த நேஹா, சோக முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள மயானக் குளத்தில் அந்த மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் இந்தத் துயரமான முடிவு அவரது பெற்றோரையும் உறவினர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. பாசத்திற்காக ஒரு இளம் உயிர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட இச்சம்பவம், பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக அமைந்ததுடன், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
