மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB), நாடு முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களில் காலியாக உள்ள 11,127 உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை (CEN 01/2026) வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்பக் கால அடிப்படைச் சம்பளமாக ₹19,900 (நிலை-2) வழங்கப்படுவதோடு, இதர படிகளுடன் சேர்த்து சுமார் ₹30,000 வரை ஊதியம் கிடைக்கும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்புத் தேச்சியுடன் சம்பந்தப்பட்ட துறைகளில் ITI, டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01 ஜூலை 2026 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
முக்கிய தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 15, 2026 அன்று தொடங்கி, ஜூன் 14, 2026 நள்ளிரவு 11:59 மணியுடன் முடிவடைகிறது.
