“ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன் வா பாப்பா”…. 11 வயது சிறுமியிடம் அத்துமீறிய 43 வயது நபர்… கூடுவாஞ்சேரியில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 11 வயது பள்ளி சிறுமி ஒருவர், தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் (43) என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மகாதேவனைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட மகாதேவனை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரைச் சிறையில் அடைத்தனர். வீட்டின் வாசலில் விளையாடிய சிறுமியிடம் முதியவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

8 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

18 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

28 minutes ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

43 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

45 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

50 minutes ago