வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, தாய் கண்டித்த காரணத்திற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்பாடி பிரம்மபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அரும்பருத்தி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற மாணவன், கார்ணாம்பட்டு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய கிருஷ்ணாவை, அவனது தாய் தரணி ரேஷன் கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்கவே, தாய் அவரை கண்டித்துவிட்டு தனது மூத்த மகனுடன் கடைக்குச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
ரேஷன் கடைக்குச் சென்று வீடு திரும்பிய தாய், மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கதறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட மாணவன், உடனடியாக கருகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பிரம்மபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவனின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சிறிய கண்டிப்புக்காக பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…