மயங்கி விழுந்த 10-ஆம் வகுப்பு மாணவி.. பரிசோதித்த டாக்டர்கள் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை!… பதறிய பெற்றோர்…. சேலத்தில் அரேங்கேறிய கொடூர சம்பவம்..!!

By Muthu Mani on பங்குனி 18, 2026

Spread the love

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், ஒரு பள்ளிச் சிறுமியின் வாழ்க்கையைப் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆத்தூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் விஜய் என்பவருக்கும், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் வழியாகத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், அந்த இளைஞர் ஆசை வார்த்தைகளைக் கூறி சிறுமியைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பழகியுள்ளார்.

தன்னை நம்பி வந்த சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அருண் விஜய் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்தச் சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து அதிர்ச்சியளித்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தது.

   

மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அருண் விஜய்யுடன் ஏற்பட்ட பழக்கமும், அவர் செய்த அத்துமீறல்களும் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அருண் விஜய்யைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான உரிய மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

   

இந்த விவகாரத்தில் அருண் விஜய்யின் பெற்றோருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களின் வழியே அறிமுகமாகும் நபர்களிடம் சிறுமிகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆத்தூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.