மாதந்தோறும் ரூ.1,000.. புதிய விண்ணப்பம் அறிவிப்பு…. சற்றுமுன் தமிழக அரசு அதிரடி….!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து, இதுவரை வேலைவாய்ப்பு பெறாத பதிவுதாரர்களுக்குத் தமிழக அரசு மாதந்தோறும் ரூ. 1,000 வரை உதவித்தொகை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோர் www.tnvelaivaaippu.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; இது குறித்த அறிவிப்புகள் தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகின்றன.