சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில், கையில் பாம்பைப் பிடித்துக் கொண்டு வீடியோ எடுத்த இளம் பெண் ஒருவருக்குப் பாம்பு திடீரென மூக்கிலேயே கொத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை முகத்திற்கு அருகே வைத்துப் போஸ் கொடுத்தபோது, எதிர்பாராவிதமாக அது அவரது மூக்கைக் கடித்ததால் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனால் நிலைகுலைந்து போனா அப்பெண், பயத்தில் பாம்பை எறிந்துவிட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்தார். இச்சம்பவம் எங்கு நடந்தது என்ற விபரம் தெரியாத போதிலும், இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சமீபகாலமாக ரீல்ஸ் மோகத்தால் மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. விஷப் பாம்புகள் மற்றும் கொடூர விலங்குகளுடன் ரீல்ஸ் எடுப்பதைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். “உயிர் இருந்தால் தான் உலகம்” என்பதை உணர்ந்து, ஆபத்தான உயிரினங்களிடம் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், உயிர் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் மேலும் பல வீடியோக்களை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
