குஷியோ குஷி…. மகளிருக்கு வங்கி கணக்கில் ரூ.1,000.. CM விஜய் இனிப்பான செய்தி…!

By Nanthini on வைகாசி 14, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், ஏழை எளிய குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ‘மகளிர் உரிமைத் தொகை’ ₹1,000 இம்மாதமும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முறைப்படி வரவு வைக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளின் கல்விக்கனவை நனவாக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ₹1,000 உதவித்தொகையும் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பு, ஆட்சி மாற்றத்தினால் நலத்திட்டங்கள் நின்றுவிடுமோ என்று அஞ்சிய பொதுமக்களிடையே பெரும் நிம்மதியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.