ஆயிரம் ஆண்டு பழமையான பிரமிடுகள் சரிந்தன… எச்சரித்த பழங்குடி மக்கள்… உலகம் அழிய போகிறதா…?

Spread the love

பிரமிடுகள் ஒரு பட்டை கூம்பு வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடிப்பாகம் சதுரமாக இருக்கும் மேலே உச்சி முக்கோண வடிவத்தில் வந்து கூம்பு போன்று இருக்கும். இந்த பிரமிடுகளை முதன் முதலில் எகிப்தியர்களால் தான் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்பே பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளது.

பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. எகிப்தியர்கள் தங்களது மூதாதையர்களின் இறந்த உடல்களை வைப்பதற்காக பிரமிடுகளை கட்டியதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரமிட் என்றாலே நம் நினைவுக்கு வருவது எகிப்திய பிரமிடுகள் தான். ஆனால் இது போல மெக்சிகோவிலும் பிரமிடுகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம். மெக்சிகோவில் பழங்குடியின மக்களான மாயன் எனப்படும் மக்கள் பிரமிடுகளை கட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் கட்டிய பிரமிடுகள் தெய்வங்களை வணங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது. சூரிய சந்திர கடவுள்கள் மற்றும் அவர்களின் குல தெய்வங்கள் இந்த பிரமிடுகளில் வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். மெக்சிகன் பிரமிடுகள் ஆயிரம் ஆண்டிற்கு மேல் பழமையானதாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் மெக்சிகோ பிரமிடுகளில் அந்த பழங்குடியைத்தவர் தங்களது குலதெய்வத்தை வணங்குவதற்காக பிரத்தியேகமாக இந்த பிரமிடுகளில் மனித உயிர்களை பலி கொடுப்பதற்காக உபயோகத்து வந்துள்ளனர்.

தற்போது இந்த மெக்ஸிகோவில் உள்ள பிரமிடுகள் பாதிப்படைந்து உள்ளது. இதனால் வரும் காலத்தில் உலகம் பெரிய அழிவை சந்திக்க இருப்பதாக அந்த பழங்குடியின மக்கள் எச்சரித்து உள்ளனர். சமீபத்தில் பெய்த அதீத மலையால் அந்த பிரமிடுகளின் தென்பகுதியிலும் நடுப்பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது வரவிருக்கும் இயற்கை பேரழிவை சுட்டுக்காட்டுகிறது எனவும் ஏற்கனவே வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தபோது ஸ்பானியர்கள் படையெடுத்து வந்து எங்கள் இனத்தவர் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் எச்சரிக்கை விடுக்கும் விதமாக இருப்பதாக அவர்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இதைப்பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கும்போது, மெக்சிகன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பிரமிடுகள் இருந்த இடங்களில் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக விரிசல் ஏற்பட்டு இருந்தது தற்போது பெய்த மழையால் அது சரிந்து பாதிப்படைந்து உள்ளது நாங்கள் அதை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அந்த பழங்குடியின மக்களோ ஆருடம் பார்த்து இந்த சகுனம் சரியில்லாதது. இது கண்டிப்பாக ஒரு இயற்கை பேரழிவுக்கு வழி வகுக்க தான் நம்மை எச்சரித்துள்ளது. தங்களது கடவுள் கோபமாக இருக்கிறார் எனவும் இது பல அழிவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் ஆருடம் சொல்லி இருக்கிறார்கள். இது நடக்குமா இல்லையா என்பதை வருங்காலத்தில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

7 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

7 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

7 மணத்தியாலங்கள் ago