அதிர்ச்சி!… “100 பெண்கள்.. 87 வீடியோக்கள்!”… வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பெண்களைச் சீரழித்த காமுகன்… நாசிக்கை உலுக்கும் கொடூரம்..!!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ‘போண்டு பாபா’ விவகாரம் அடங்குவதற்குள், 100-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிய தொழிலதிபர் ரவீந்திர எராண்டே குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சட்பூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரா, தனது அலுவலகத்தில் இருந்த டேப்லெட் திருடப்பட்டது குறித்தும், அதை வைத்து மர்ம நபர்கள் தன்னை மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரே அவருக்கு வினையாக அமைந்தது. மிரட்டிப் பணம் பறிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் பிடித்தபோது, அந்த டேப்லெட்டில் இருந்த வீடியோக்கள் தொழிலதிபரின் முகத்திரையைத் கிழித்தன.

அந்த டேப்லெட்டில் இருந்து மட்டும் சுமார் 87 ஆட்சேபனைக்குரிய ஆபாச வீடியோக்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வேலை தேடி வரும் ஏழைப் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, அவர்களை நாசிக் மற்றும் இகத்புரியில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று ரவீந்திரா பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இதனை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோக்களை நீலப் படங்களாக விற்று வந்ததும் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களான நான்கு கைபேசிகள், பென் டிரைவ்கள் மற்றும் மெமரி கார்டுகளைத் தடயவியல் சோதனைக்கு உட்படுத்திய போது, பாதிக்கப்பட்டவர்களில் அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் எனப் பல தரப்பட்ட பெண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வீடியோக்களைக் காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை அவர் மிரட்டி பணம் பறித்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபடுத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரவீந்திர எராண்டேவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த மிகப்பெரிய பாலியல் வலையமைப்பின் பின்னணியில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், இதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இடங்களை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நாசிக் நகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

32 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

37 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

41 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

45 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

49 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

50 minutes ago