தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனது தொகுதியில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் முன்னிலையில் அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு அரங்கேறியது. மார்க்கையன்கோட்டை அதிமுக முன்னாள் பேரூராட்சி சேர்மன் அகிலன் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி திமுகவில் இணைந்தனர்.
புதிதாகத் திமுகவில் இணைந்த அகிலன் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்திருப்பது, போடிநாயக்கனூர் தொகுதியில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
