சென்னையில் இன்று ஒரே நாளில் நூறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆறாவது நாளாக விமான சேவையானது ரத்து செய்யப்படுவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
