BREAKING: மழலையர் பள்ளி மீது டிரோன் தாக்குதல்… சூடானில் 33 அப்பாவி குழந்தைகள் பலி…!!

By Soundarya on மார்கழி 7, 2025

Spread the love
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை இடையிலான போரானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு சூடானின் கோர்டோபான் மாகாணம் கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி மீது விரைவு ஆதரவுப் படையானது  ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 33 பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.