ஐயோ கடவுளே… சமோசா சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலயே… வலி தாங்க முடியல… 10 வயது சிறுமி கொடூர பலி… 3 சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை… பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 9, 2026

Spread the love

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதரசாவில் வழங்கப்பட்ட சமோசா மற்றும் இனிப்புகளை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் மூன்று சிறுமிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளும் ஜாமியா-துஸ்-சாலிஹாத் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்த மதரசாவில் தங்கி படித்து வந்தவர்கள் ஆவர். உணவருந்திய சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு நச்சுத்தன்மை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற கோணத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.