உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரச் செயலில் ஈடுபட்ட உறவினருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த அனூப் குமார் வர்மா என்பவரின் மகன் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஒரு மாந்திரீகனைச் சந்தித்தபோது, குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் மகன் குணமாகிவிடுவான் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அனூப் குமார் தனது உறவினரின் மகனான விவேக் வர்மா என்ற 10 வயது சிறுவனைக் கடத்திச் சென்று நரபலி கொடுத்துள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி சுனில் பிரசாத், குற்றவாளி அனூப் குமாருக்கு மரண தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இருப்பினும், இந்தச் செயலுக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கருதப்பட்ட மாந்திரீகன் உட்பட இருவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…