கூகுள் மேப் யூஸ் பண்றீங்களா….? மெட்ரோ டிக்கெட் முதல் ஜெமினி ஏஐ முதல்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி… சூப்பர் அப்டேட்…!!

Spread the love

கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் மெட்ரோ டிக்கெட் பதிவு செய்தல் முதல் ஜெமினி ஏஐ வரையிலான 10 புதிய அம்சங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள், அமெரிக்காவில் தனது கூகுள் மேப் மேம்படுத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட அடுத்த நாளே இந்திய பயனர்களுக்கான இந்த 10 புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் முதல்முறையாக கூகுள் மேப்ஸின் இந்தப் புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் பதிவு உள்ளிட்டவை அடங்கும்.

ஜெமினி செயற்கை நுண்ணறிவுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டதால், மொபைல் போனை தொடாமலேயே எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து தேடலாம். உதாரணமாக, விலை அதிகமில்லாத அருகில் உள்ள ஒரு நல்ல உணவகத்தைக் கண்டுபிடித்துக் கொடு, அதனுடன் பார்க்கிங் வசதியும் வேண்டும் எனக் கூறினால் ஜெமினி செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட கூகுள் மேப்ஸில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதோடு நின்றுவிடவில்லை. மின்சார வாகன பயனர்கள் சார்ஜிங் இடங்களைப் பற்றியும் கேட்டுக்கொள்ளலாம். இடம் தொடர்பான தேடல் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்பிரேஷன் என்ற அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் பயணத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்கள், உணவங்கள் குறித்த பரிந்துரைகளையும் வழங்குகிறது. பயனர் மதிப்பீடுகள், புகைப்படங்கள், பொதுத் தகவல்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கும் கூகுள் மேப்ஸால் பதிலளிக்கலாம்.

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை கூகுள் மேப்ஸில் போக்குவரத்து நுண்ணறிவு தொடர்பாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல், இடையூறுகள் உள்ளிட்டவற்றையும் முன்பே கணித்துக் கூறும் அம்சங்களும் உள்ளன.

அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள், சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்கள் மற்றும் நொய்டா, குருகிராம், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகர்களின் நெடுஞ்சாலைகளில் உள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகளின் இடங்களையும் கூகுள் மேப்ஸால் கூறலாம்.

பயண வசதி மேம்பாடுகள் தில்லி, பெங்களூரு, கொச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள மெட்ரோவில் செல்லக்கூடிய பயணிகள் இப்போது கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த செயல்முறை விரைவில் மும்பையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சிக்கலான மேம்பாலங்களில் செல்வது தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதனையும் தொடுதல் இன்றி குரல் மூலம் பயன்படுத்தலாம்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

4 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

9 minutes ago

“புது அம்மா வருவாங்க!”… வயது வித்தியாசத்தால் வெடித்த விபரீதம்?… மகள்களுடன் காவல் நிலையம் சென்ற கணவர்… நள்ளிரவில் நடந்த பயங்கர கொலை…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…

18 minutes ago

ஐயோ… அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?… பெரிய குளக்கரையில் மயங்கிக் கிடந்த இளம்பெண்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… புவனகிரியில் பெரும் பரபரப்பு….!

யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…

22 minutes ago

மதம் வேறு… மனிதநேயம் ஒன்றுதான்… இறந்த பிறகும் தனியாக விடவில்லை… 85 வயது மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…

26 minutes ago