அட கொடுமையே…நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து… 10 கிராம் தங்கம் கொள்ளை… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

By Swetha on ஐப்பசி 24, 2026

Spread the love

பின்னிப்பேட்டை மாகடி சாலையில் அமைந்துள்ள அஞ்சன் தியேட்டர் அருகில் உள்ள ‘ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ்’ என்ற நகைக்கடையில் சுமார் 10 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மதியம் சுமார் 12:30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்குள் வாடிக்கையாளர் போல வந்த நபர் ஒருவர், உரிமையாளரிடம் நகைகளைக் காட்டுமாறு கேட்டு லாவகமாக அவரது கவனத்தைத் திசைதிருப்பியுள்ளார். உரிமையாளர் வேறு வேலை காரணமாகச் சிறிது நேரம் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வருவதற்குள், அந்த நபர் அங்கிருந்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இந்த முழுச் சம்பவமும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

   

https://twitter.com/HateDetectors/status/2113563581950181408/video/1

   

சம்பவம் குறித்துக் கடை உரிமையாளர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.