“நீ ரொம்ப நல்லவன்யா” உலகக்கோப்பை பயிற்சிக்காக உதவிய ஊழியர்களுக்கு ₹10 லட்சம் பரிசு… ஹர்திக் பாண்டியாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்..!!

By Soundarya on பங்குனி 27, 2026

Spread the love

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, வான்கடே மைதானத்தின் பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கி நெகிழ்ச்சியூட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்காக (T20 WC) அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இரவு பகல் பாராமல் தனக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஊழியர்களைப் பாராட்டும் விதமாக இந்த நிதியுதவியை அவர் வழங்கியுள்ளார்.

களத்தில் ஆக்ரோஷமான மனப்பான்மையைக் (Attitude) காட்டினாலும், நிஜ வாழ்க்கையில் ஊழியர்களின் உழைப்பை மதித்து அவர் செய்துள்ள இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் “நீ ரொம்ப நல்லவன்யா” என ஹர்திக் பாண்டியாவைப் பாராட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.