விஜய் சேதுபதி டூ மாதவன் வரை…. பிரபலமான தமிழ் நடிகர்களின் குழந்தைகள் பெயர்கள்…. ஹாட் டாபிக்காக மாறிய சுவாரஸ்யங்கள் இதோ…??

By admin

Published on:

ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோருடன் நேரத்தை செலவிட விரும்புகிறது. ஆனால் சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் தங்களின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஆனால் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர்கள் அந்த நேரம் முழுவதையும் தங்கள் குழந்தைகளுடன் நன்றாக செலவிட நினைக்கிறார்கள்.

   

சில பிரபலங்கள் தங்கள் குழந்தைகள் மீது மீடியா வெளிச்சம் வெகு சீக்கிரம் படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எப்படியோ, ஒரு சில பிரபலங்களின் குழந்தைகள் புகைப்படம் அல்லது எதாவது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

அப்படி இப்போது, ​​நிறைய நட்சத்திரங்கள் தங்கள் மறக்கமுடியாத தருணங்களை தங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் குழந்தைகால் சில நேரங்களில் ஹாட் டாப்பிக்காக மாறுவது ஏன் என்று இப்போது பார்க்கலாம். நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்ட ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தன்னுடைய பள்ளி நாட்களில் இறந்த தன்னுடைய பழைய நண்பனின் நினைவாக தன்னுடைய மகனுக்கு சூர்யா என்று பெயரிட்டதாக கூறியுள்ளார்.

நானும் ரவுடிதான் படத்தில் இவருடைய மகன் விஜய் சேதுபதியின் இளமையான வேடத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதிக்கு ஒரு மகளும் உள்ளார் அவருடைய பெயர் ஸ்ரீஜா.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

யாத்ரா 2006 ஆம் வருடம் பிறந்தார். இளைய மகன் லிங்கா 2010ல் பிறந்தார். இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் காணப்படமாட்டார்கள்.

ஆனால் சமீபத்தில் தனுஷ் அவர்களோடு மொட்டை மாடியில் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை பகிர்ந்து கொண்டார். இந்த படம் இணையத்தில் வைரல் ஆனது.

ரஜினியின் படங்களிக் ஒன்றின் பெயர் லிங்கா. இதனால் தனுஷின் இளைய மகன் அந்த நேரத்தில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.

நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் சமூக வலைதளங்களில் அதிகம்  ஆக்டிவாக இருக்கும் ஜோடி.

சில படங்களில் இணைந்து பணியாற்றிய இந்த ஜோடி திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்தது. இருவருக்கும் தற்போது விஹான் என்ற 4 வயது ஆண் குழந்தையும், ஆதியாந்தா என்ற 2 வயது மகளும் உள்ளனர்.

இந்த ஜோடி  பொதுவாக சமூக ஊடகங்களில் தங்கள் குழந்தைகளுடன் நிறைய படங்களை பதிவிடுவதால் அந்த படங்கள் ஹாட் டாப்பிக்கில் இடம் பெறுகின்றன.

ஜெயம் ரவி  காதல் படங்கள் மற்றும் சமூக-அரசியல்  படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்குஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ரவி தனது குடும்ப புகைப்படத்தை இணையப்பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அவரது மகன் ஆரவ் 2018 ஆம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகர் மாதவன் சரிதா என்பவரை மணந்தார். இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார். ஜூனியர் தேசிய நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக வேதாந்த் சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

நடிகர் கார்த்திக்கும் ரஞ்சினிக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் அது.

இந்த அழகான ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு ஏற்கனவே உமையாள் என்ற மகள் உள்ளார்.

தன் தாத்தா வெளியூர் செல்லும் போதெல்லாம் பாட்டியுடன் தங்க விரும்புவதாக தன் மகளைப் பற்றிய உண்மையைப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார் கார்த்தி