“இன்னிசை பாடி” இன்றோடு 24 ஆண்டுகளை கடந்த….. விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும்…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

By admin

Updated on:

நடிகர் விஜய் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான  எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார்.

   

விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் அன்றிலிருந்து இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். அதில் மறக்க முடியாத ஒரு படம் துள்ளாத மனமும் துள்ளும்.

நடிகர் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் ஆனதை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படமானது இயக்குனர் எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதில் குட்டி என்ற காதாபாத்திரத்தில் விஜய்யும், ருக்குமணி என்ற கதாபாத்திரத்தில் சிம்ரனும் நடித்துள்ளார்.

சிம்ரன் இந்த படம் பாதியில் கண் தெரியாத பெண்ணாக நடித்திருப்பார்.

இத்திரைப்படம் 4 கோடி‌ பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு ‌12கோடி(தமிழ்) மற்றும் ‌பிற மாநிலங்கள், ‌நாடுகளில் 6 கோடி‌வசூல் செய்தது.

1999ஆம் ஆண்டின் ‌3ஆவது மிகப்பெரும் ‌வெற்றிப்படமானது. இந்த  படம் வெள்ளிவிழா கொண்டாடியது.

இந்த திரைப்படம் 200 நாட்கள் பல திரையரங்குகளில் கடந்து மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது.

இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது சிம்ரனுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த படத்தின் சிறந்த நடிப்பிற்காக விஜய் எம்.ஜி.ஆர் சிறப்பு கௌரவ விருது பெற்றார்.

மேலும் இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ‌தமிழக அரசின் இரண்டாம் இடம் பெற்றது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் இன்னிசை பாடி வரும் பாடல் இன்று வரை ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் இனிமையாக இருக்கும். இப்படி பிரபலமான இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனை நடிகர் விஜயின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.