பிரபல இசையமைப்பாளரான அனிருத் ஹூக்கும் என்ற இசை நிகழ்ச்சியை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடத்த திட்டமிட்டார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். சுமார் 45 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானது.
பின்னர் பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அனிருத் அறிவித்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் நாளை கூவத்தூர் பகுதியில் உள்ள மார்க் சொர்ணபூமி என்ற இடத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் அனிருத் இசை நிகழ்ச்சியை நடத்துவதாக எம்எல்ஏ தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…