#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய், இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கின்றார்.
மேலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்திரி நடித்திருக்கின்றார். அதைத்தொடர்ந்து நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதும் வெங்கட் பிரபு வைத்த முதல் கோரிக்கை இப்படத்திற்கு தனது சகோதரர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க வேண்டும் என்பதுதான்.
அதற்கு விஜய்யும் ஓகே கூறிவிட்டார். பொதுவாக விஜய் திரைப்படங்களில் வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போதும் மிகப்பெரிய ஹிட்டாக இருக்கும். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் வாத்தி கம்மிங், ரஞ்சிதமே, நான் ரெடி தான் வரவா உள்ளிட்ட திரைப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு பாடல் ரசிகர்களை பெருமளவில் கவரவில்லை.
யுவன் சங்கர் ராஜா முதலில் இந்த பாட்டை முடித்துவிட்டு நான்கு டியூன்களை விஜய்க்கு அனுப்பினாராம். அதில் விஜய் தான் இந்த ட்யூனை தேர்வு செய்தாராம். அதன் காரணமாகவே இப்பாடல் சரியாக போகாத நிலையில் நடிகர் விஜய் அமைதி காத்து வருகின்றார். அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா எப்படியாவது சூப்பர் ஹிட் பாடலை தளபதிக்கு கொடுத்து விட வேண்டும் என்று வெறித்தனமாக வேலை பார்த்து வருகிறார் .
அது மட்டும் இல்லாமல் மறைந்த தனது தங்கை பவதாரணியின் குரலை மூலம் பயன்படுத்தி அருமையான மெலோடி பாடல் ஒன்றையும் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் நிச்சயம் விஜய் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த இரண்டாவது சிங்கள் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…