Categories: சினிமா

குடும்பம், குழந்தையினு ஆனதால் நடிகை நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. 2 கார வேற வித்துட்டாங்களாமே..!

Spread the love

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுக்காக மிகப்பெரிய காரை வாங்க இருப்பதால் தன்னிடம் உள்ள இரண்டு காரையும் விற்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் சினிமாவில் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகின்றார். பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் குழந்தை குடும்பம் இன்று சினிமாவில் இருந்து விலகி விடுவார்கள்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

அதுவரை சமூக வலைதள பக்கங்களில் தலைக்கட்டாமல் இருந்து வந்த நடிகை நயன்தாரா தனது கணவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சமூக வலைதள பக்கங்களில் கணக்கு திறந்து அதில் தனது குழந்தைகள் கணவருடன் இருக்கும் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். குடும்பம், குழந்தைகள், சினிமா, பிசினஸ் என அனைத்தையும் மிகச் சிறப்பாக சரியாக கவனித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட தனது இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு ஹாங்காங் சென்று சிறப்பாக கொண்டாடி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வந்தது. சமீபத்தில் நடிகை நயன்தாரா அப்பார்ட்மெண்டில் செய்யும் அட்ராசிட்டி வேலைகள் தொடர்பான தகவலும் வெளியாகி வைரலாகி வந்தது. அதாவது நடிகை நயன்தாரா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பார்ட்மெண்ட்க்கு கீழே இருக்கும் பார்க்கில் விளையாட அழைத்துச் செல்லும்போது அங்கு இருக்கும் யாரையும் சத்தம் போட்டு பேசக்கூடாது வேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது என பல பிரச்சனைகளை செய்து வருகின்றார்.

அது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு புது தகவலும் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகை நயன்தாரா அப்பார்ட்மெண்டில் இருப்பதால் அங்கு பல கார்களை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் தன்னிடம் இருக்கும் இரண்டு கார்களை விற்றுவிட்டு தற்போது டொயோட்டா அறிமுகம் செய்திருக்கும் வெல்ஃபேர் காரை வாங்க இருக்கிறாராம்.

இந்த காரின் விலை மற்றும் 1 கோடியே 60 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. நடிகை நயன்தாராவிடம் பிஎம்டபிள்யூ போன்ற வசதியான கார்கள் இருந்தாலும், அந்த கார்களை விட இந்த வெல்ஃபேர் கார் இன்னும் வசதியாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்காக இந்த காரை வாங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை நயன்தாரா. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

5 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

5 மணத்தியாலங்கள் ago