வெறித்தனமாக பாடிக்கொண்டே நடனமாடும் யுவன் சங்கர் ராஜா….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….வைரலாகும் வீடியோ ….உள்ளே ….

By Begam

Published on:

தீம் இசை என்றாலும் ஹிட் பாடல் என்றாலும் உடனடியாக ரசிகர்கள் நினைவுக்கு வருபவர் யுவன் சங்கர் ராஜா. பில்லா திரைப்படத்தில் நடிகர் அஜித் நடந்து வரும்போது ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை யாராலும் மறக்க முடியாது.

   

இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. 24 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையப்பரிப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டுள்ளார். தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர் , யுவன் சங்கர் ராஜா.

யுவன் சங்கர் ராஜா இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்க முடியாது என்ற அளவிற்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் அவர் மீது  மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்துள்ளார். அண்மையில் இவர் இசையமைப்பில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியது.

இவருடைய இசையமைப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா காசர்ட் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் திரைத் துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக பாடிக்கொண்டே வெறித்தனமாக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar