பவதாரிணியின் Body-ஆ எடுத்துட்டு போறதுக்கு இவுங்க தான் உதவுனாங்க.. தனது அக்காவின் இழப்பிற்கு பிறகு முதன் முறையாக யுவன் அளித்த பிரஸ் மீட்..

By Archana

Updated on:

பவதாரணி. இசையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் தன்மையோடு வலம் வந்த பவதாரணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்து போன செய்தி, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இசை உலகின் ஜாம்பவான் இளையராஜாவின் ஆசை மகள், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் தங்கை, யுவன் சங்கர் ராஜாவின் அக்கா என பிரபலங்களின் சொந்தமாக இருந்தாலும், அந்த நிழலை விட்டு வந்து, பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பவதாரணி.

screenshot30064 1706368488 1

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை மிக தாமதமாக கண்டறிந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை முறைக்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் அவரது சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனது 47 வயதில் உயிரிழந்துள்ளது திரையுலகினரையும் பொதுமக்களையும் பெரும் சோகத்திற்குள் தள்ளியுள்ளது. இலங்கையிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட அவரது உடல், சென்னையில் இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.

   
Bhavatharini Raja

அங்கு அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரது சமாதிகளுக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரணியின் இறுதிச்சடங்கில் வெங்கட்பிரபு, யுவன் உள்ளிட்ட அவரது சகோதரர்கள் கண்ணீர் மல்க, அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை பாடி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், பவதாரணி குறித்து யுவன் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தந்தை இசைஞானி என்று போற்றப்பட்டாலும், யுவன் ஷங்கர் ராஜா இசையை முறையாக கற்றவர் இல்லை. ஆனால் கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகிய இருவரும் முறையாக இசை பயின்றவர்கள். தனக்கு சுத்தமாக இசை தெரியாது என்றும், முதல்முறையாக தன் கையைப்பிடித்து பியாவோவில் வைத்து, தனக்கு அதை வாசிக்க சொல்லிக் கொடுத்தவர் தன் அக்கா பவதாரிணி தான் என்று யுவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

author avatar
Archana