#image_title
தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களின் செவிகளில் தேன்மழை பொழிந்தவர் மலேசியா வாசுதேவன். குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையில் அவர் பாடிய 80 கள் மற்றும் 90 கள் பாடல்கள் இன்றும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.
மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், நடிக்கவேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாடு வந்து வாய்ப்புகளை தேடியுள்ளார். பொருளாதார பிரச்சனை காரணமாக தன்னுடைய பாஸ்போர்ட்டையே விற்றுவிட்டு திரும்ப மலேசியா செல்ல முடியாமலும் தவித்துள்ளார்.
அப்போதுதான் அவருக்கு எஸ்பிபியின் இசைக்குழுவில் பாடகராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்களோடு இணைந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் பாடியுள்ளார். அதன் மூலமாகதான் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் ஆகியோரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்படிதான் அவருக்கு பதினாறு வயதினிலே படத்தில் எஸ் பி பி பாடவேண்டிய ஒரு பாடல் அவரால் பாடமுடியாத சூழலில் இவருக்குக் கிடைத்து முன்னணி பாடகர் ஆனார்.
அதன் பின்னர் ஜேசுதாஸ், பாலசுப்ரமணியத்துக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தளவுக்கு இவருக்கு சாகாவரம் பெற்ற பாடல்களைக் கொடுத்தார் இளையராஜா. அப்படி புகழின் உச்சிக்கு சென்ற மலேசியா வாசுதேவன், உடல்நலக் குறைவு காரணமாக 2000 களின் தொடக்கத்தில் பாடமுடியாத சூழலுக்கு ஆளானார்.
நீண்டகாலம் உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் மகனும் பாடகருமான யுகேந்திரன் அளித்த ஒரு நேர்காணலில் “எங்க அப்பாவின் கடைசி காலத்தில் அவரை ராஜா மாமா வந்து பாக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. ஜீவா ஆண்ட்டிகிட்ட கூட அவரை வந்து பாக்க சொல்லுங்க என சொன்னோம். ஆனால் அவர் வரவேயில்லை. எங்க அப்பா சாகும் நாள் அன்னைக்குதான் வந்தார். சினிமாவில் நடப்பது போல அவர் காலடி எடுத்து வைக்கும்போதுதான் எங்க அப்பா உடம்பில் இருந்து ஒவ்வொரு கருவியாக எடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு சாட்சியாக, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அபுதாபி…
தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…