சூரரைப் போற்று படத்தில் “கையிலே ஆகாசம்” பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?.. யுகபாரதி பகிரும் சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on வைகாசி 20, 2025

Spread the love

ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்தான் யுகபாரதி. ஆனால் இவருடைய இயற்பெயர் பிரேம் குமார். பாரதியார் மீது கொண்ட பற்று காரணமாக தன் பெயரை யுகபாரதி என மாற்றிக் கொண்டார். ஆனந்தம் படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் பாடல்களை எழுதினாலும் பெயரும் புகழும் கிடைத்ததில்லை. இவரும் இமானும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இருவருக்குமே மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் மைனா தான். இந்த படத்தில் இடம் பெற்ற மைனா மைனா நெஞ்சுக்குள்ளே, ஜிங்கு ஜிக்கா பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது. இந்தப் பாடல் பலருடைய காதல் ரிங் டோன் ஆகவே மாறியது.

உருப்படுமா இந்நாடு? - கவிஞர் யுகபாரதி | Poet Yugabharathi on Demonitisation  - Tamil Filmibeat

   

அதன் பிறகு இவர்களுடைய கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெக்க, கும்கி, அண்ணாத்த மற்றும் மருது உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்கள் கொண்டாடும் ஹிட் ஆன பாடல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது. யாரும் மறந்திடாத மன்மத ராசா யுகபாரதி தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் ஏ ஆர் ரகுமானுடன் இதுவரை பணியாற்றது கிடையாது. இப்படி சினிமாவிற்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள யுகபாரதி சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கும் ஒரு பாடலை எழுதியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கையிலே ஆகாசம் பாடலை யுகபாரதி எழுதியிருந்த நிலையில் சைந்தவி பாடி இருந்தார்.

   

Soorarai Pottru - Lyric Tamil

 

இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த பாடல் எப்படி உருவானது என்பது குறித்து யுகபாரதி சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு பாட்டி விமானத்தில் பயணித்துவிட்டு வந்து பேசுவதை போன்ற காட்சியை மட்டும் என்கிட்ட போட்டு காட்டிட்டு இந்த இடைவெளியில் நாம் மியூசிக் போட்ட செட்டாகல நீங்க ஒரு பாட்டு போடுங்க என்று சொன்னாரு. உடனே நானும் அந்த காட்சியை மட்டும் பாத்துட்டு பாட்டு எழுதி கொடுத்துட்டேன். அப்புறம் சில மாதங்கள் கழித்து ஜிவி பிரகாஷ் எங்கிட்ட வந்து நான் படம் ஃபுல்லா உங்ககிட்ட போட்டு காட்டல நீங்க அந்த கொஞ்சம் காட்சியை மட்டும் பார்த்துட்டு எப்படி பாட்டு எழுதினீங்க என்று என்கிட்ட கேட்டாரு. அப்பதான் அவர்கிட்ட நான் ஒரு சம்பவத்தை எடுத்து சொன்ன.

ChordsKnight: The GUITAR CHORDS for the song "kaiyile aagasam" from "Soorarai  Pottru"

அதாவது நான் சில படங்களுக்கு பாட்டு எழுதி வெற்றி பெற்ற பிறகு துபாயில் என்ன கூப்பிட்டாங்க. அப்போ என்கிட்ட பாஸ்போர்ட் கூட கிடையாது. பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டு விமானத்தில் பயணிக்க போயிட்ட. இந்த விஷயத்தை பெருமையா என்னுடைய அப்பா எங்க பாட்டி கிட்ட போய் சொல்லி இருக்காங்க. உடனே அவங்க விமானத்தில் போயிருக்கான் போயிட்டு பத்திரமா வந்துருவானா வந்ததும் அவனுக்கு சுத்தி போடணும் எல்லாரும் கண்ணு வச்சிருவாங்க என்றெல்லாம் சொல்லி இருக்காங்க. எங்க ஊர்ல விமானத்தை யாரும் பார்த்ததே கிடையாது. நான் துபாய் போய்ட்டு வந்ததும் பாட்டி கிட்ட ஆசீர்வாதம் வாங்குவதற்காக சென்றபோது அவங்க குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிட்டு போய் சுத்தி போடணும் என்று எங்கிட்ட பேசினாங்க.

அரசுப் பதவி யாருக்கு..? 'கலைஞர்' விழாவில் யுகபாரதி சொன்ன கதை! | Lyricist  Yugabharathi has spoken about artist Karunanidhi - Tamil Oneindia

நான் உங்களையும் ஒரு நாள் கூட்டிட்டு போறேன் என்று அவங்க கிட்ட வாக்குறுதி கொடுத்தேன். உடனே அவங்க நான் வெத்தலை பாக்கு போடுவேன், விமானத்தில் ஜன்னல் திறந்து வைப்பாங்களா என்று கேட்டார்கள். அன்னைக்கு அது எனக்கு காமெடியா இருந்தாலும் அவர்களை எப்படியாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஐடி கார்டு எதுவும் இல்லாததால் அதை வாங்குவதற்காக ஆறு மாதம் முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் இருக்க பாட்டிய நாங்க பறிகொடுத்துட்டோம். கடைசி வரைக்கும் என்னோட பாட்டி விமானத்தில் கூட்டிட்டு போக முடியல என்ற குற்ற உணர்வு எனக்கு இருந்துகிட்டு தான் இருக்கு. இப்போ சூரரைப் போற்று படத்தில் கையிலே ஆகாசம் என்ற பாடலை போட்டு கேட்டு பாருங்க அதுல என்னோட பாட்டி சொன்ன அத்தனை வார்த்தையையும் நான் எழுதி இருப்பேன். இப்படிதான் அந்த பாடலை நான் எழுதினேன் என்று யுகபாரதி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.