கோலாகலமாக நடந்து முடிந்த youtuber இர்பான்  திருமணம்… மணப்பெண் இவர்தானா?… வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்…

By Begam on வைகாசி 14, 2023

Spread the love

சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் இர்பான். யூடியூப் மூலம் பிரபலமான இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை என சொல்லலாம். எங்கெங்கோ உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று விதவிதமான உணவுகளை சாப்பிட்டு அதுக்குறித்த விமர்சனங்களை தனது யூடிப் சேனலில் வீடியோவாக வெளியிடுவார் இர்பான்.

   

தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்றும் அங்கும் பல ஹோட்டல்களில் சாப்பிட்டு வீடியோக்கள் பகிர்ந்துள்ளார்.

   

 

தற்போது இர்பான் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி அந்த வீடியோக்களையும் தனது யூடிப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இந்த விடீயோக்களுக்கு மக்கள் மத்தியில்  வரவேற்பு இருந்து வருகிறது.

அவரது Irfan’s view என்ற சேனளுக்கு 3.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் திருமணம் தடைப்பட்டதாக அவரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இர்பானின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட தற்பொழுது அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.