#image_title
இன்றைய காலகட்டத்தில் பலர் யூடியூபில் தான் இருக்கிறார்கள். யூட்யூபில் வீடியோ போட்டால் பல லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் யூடியூபில் அதிக சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருப்பவர்களும் பிரபலமாக தான் இருக்கிறார்கள். அப்படி யூடியூபின் ஒரு பிரபலமானவர்தான் இர்ஃபான். இவர் ஒரு Food Reviewer ஆவார். வேறு இடங்களுக்கு நாடுகளுக்கு சென்று பல்வேறு உணவுகளை ருசி பார்த்து அதை ரிவ்யூவாக கூறுபவர்.
இவர் சாப்பிடாத உணவுகளே இல்லை என்று சொல்லலாம். சிக்கன் மட்டன் போன்ற அசைவங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று பூச்சிகள், சிலந்தி பாம்பு வரை என அனைத்தையும் சாப்பிட்டவர் இர்பான். அதன் மூலமே இவர் மிகவும் பிரபலமாக ஆனார். ஓராண்டுக்கு முன்பு இர்பானுக்கு திருமணம் நடைபெற்றது.
அதற்குப் பிறகுதான் அவருக்கு சில பிரச்சினைகளும் ஏற்பட்டது என்று கூறலாம். திருமணத்துக்கு பிறகு தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போதே துபாய்க்கு சென்று என்ன குழந்தை என்று பரிசோதனைகள் தெரிந்து விட்டு அதை இந்தியாவில் வைத்து Gender Reveal என்ற பார்ட்டி நடத்தி அதை தனது youtube இல் பதிவேற்றமும் செய்தார்.
இதனால் இவர் மீது வழக்கு பாய்ந்தது. ஏனென்றால் இந்தியாவில் என்ன குழந்தை என்று வெளியே கூறுவது சட்டப்படி குற்றம். அதை மீறியும் அவர் செய்தார். அந்நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டார் ஆனால் அவரை கைது செய்யவில்லை. அதற்குப் பிறகு குழந்தை பிறந்த பிறகும் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தார். அதில் அவர் தனது மனைவியின் பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டரில் தனது மனைவியுடன் இருப்பது போலவும் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் தொப்புள்கொடியை இர்பான் கத்தரியால் வெட்டி இருக்கிறார். இதற்கு டாக்டரும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இது மிகப்பெரிய சர்ச்சையாக தமிழ்நாடு முழுவதும் மாறியது. அமைச்சர் உட்பட அனைவரும் இதை எதிர்த்து குரல் கொடுத்தனர். அந்த நேரத்தில் இர்பான் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் அதனால் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் மா சுப்பிரமணியன் இர்பான் வெளிநாட்டிலிருந்து வந்த உடனே எல்லா நடவடிக்கையும் நாங்கள் எடுப்போம். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர் அல்லாத ஒரு நபர் குழந்தையின் தொப்புள்கொடியை அறுப்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இது மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்பு உதாரணம் என்று பலர் பேசப்பட்ட நிலையில் தற்போது அதற்குப் பிறகு youtube இர்ஃபான் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அதேபோல் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் ஜெயராமின் திருமணத்திலும் கூட இர்ஃபான் கலந்து கொண்டார். இர்பானுக்கும் ஜெயராமனுக்கும் என்ன சம்பந்தம் இவர் எப்படி எல்லோருடைய பிரபலங்களின் விசேஷங்களுக்கு செல்கிறார் என்று பேசினர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கூட ஒரு வீடியோ பண்ணி இருந்து அவருடன் க்லோசாக இருப்பது போல் தெரிந்தது. அதனால் இவருக்கு மிகப்பெரிய பின்புலம் இருக்கிறதோ அதனால் இவர் மீது மட்டும் சட்டம் செயல்படவில்லை என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு எல்லாம் இர்பான் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் எனக்கு அரசியல் பின்பலம் எதுவுமே கிடையாது. நான் துணை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடன் வீடியோ பண்ணியது ப்ரோமோஷன்காக மட்டுமே தவிர வேறு எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை பற்றி தவறாக நினைக்க வேண்டாம் நாம் எல்லாவற்றையும் சட்ட ரீதியாக தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்று தனது youtube இல் அவர் விளக்கத்தை கூறியிருக்கிறார். இருந்தாலும் இவர் கூறியது நம்பற மாதிரியா இருக்கு என்று மக்கள் பேசி வருகிறார்கள்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…