“போலீஸ் கான்ஸ்டபிள் முகத்தில் குத்தி…” நண்பரை பார்க்க சென்று வாலிபர்கள் செய்த காரியம்…. ஹாஸ்பிடலில் அரங்கேறிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி பகுதியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நண்பரைப் பார்க்க வந்து மருத்துவர்களுடன் தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட பாதுகாப்புப் போலீஸ் கான்ஸ்டபிள் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் இரும்பு காப்பால் முகத்தில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 24-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கௌஸ்துப் குப்தா என்பவரைக் காண வந்த அவரது நண்பர்கள் மூவர், மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்து மருத்துவமனையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் அமோல் சுரேஷ் ஷிண்டே மற்றும் மற்றொரு காவலர் அவர்களை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியபோது, ஆத்திரமடைந்த கும்பல் காவலரின் சீருடையின் காலரைப் பிடித்து இழுத்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது.

   

இதையடுத்து உதவிக்காகப் புறக்காவல் நிலையத்திற்குச் சென்ற அமோல் ஷிண்டேவை பின்தொடர்ந்து சென்ற வைபவ் சுபாஷ் சாலுங்கே என்பவர், அவரது கழுத்தை நெரித்து முகத்தில் குத்தியதுடன், தான் அணிந்திருந்த தடிமனான இரும்புக் காப்பைப் பயன்படுத்தி அவரது நெற்றிப் பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த காவலர் அளித்த புகாரின் பேரில், வைபவ் சுபாஷ் சாலுங்கே, குஷால் நைனா கோயல் மற்றும் சோஹெல் ஷபீர் ஷேக் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.