“ஹாரன் அடிச்சா கோபம் வருமா…?” பள்ளி பேருந்து ஓட்டுநரை அடிக்கப் பாய்ந்த இளைஞர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on பங்குனி 26, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, பள்ளிப் பேருந்து ஓட்டுநரை இரு இளைஞர்கள் பொதுவெளியில் மிரட்டி, தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த தர்மன் என்பவர், உப்பு மாரியம்மன் கோயில் அருகே வரும்போது எச்சரிக்கைக்காக ஹாரன் அடித்துள்ளார். அப்போது சாலையோரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹாரன் சத்தம் தனது பேச்சிற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, தனது நண்பருடன் சேர்ந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முதியவர் என்றும் பாராமல் ஓட்டுநரையும், கிளீனரையும் தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த இளைஞர்கள், கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த அட்டூழியத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாகத் தலையிட்டு இளைஞர்களைத் தடுத்து ஓட்டுநரை மீட்டனர். இது தொடர்பாக ஓட்டுநர் தர்மன் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு தலைமறைவாக உள்ள அந்த இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பேருந்தின் ஓட்டுநருக்கே இத்தகைய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த இளைஞர்களுக்குக் காவல்துறை தகுந்த ‘ட்ரீட்மென்ட்’ அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.