“எதுக்கு இவ்வளவு சத்தம்”… கொத்து பரோட்டா போட்ட சத்தத்தில் வந்த வாய் தகராறு… இளைஞருக்கு கத்திக்குத்து.. 5 வயது மகளுடன் பரிதவிக்கும் 6 மாத கர்ப்பிணி பெண்…!

By Nanthini on புரட்டாதி 10, 2025

Spread the love

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் நடந்த ஒரு துயர சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தனகுமார் (28) என்ற வாலிபர் பிரதான சாலையில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாண்டி தேவி என்ற மனைவியும் ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். மேலும் பாண்டி தேவி தற்போது ஆறுமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே சந்தனகுமார் அருகில் உள்ள ஹோட்டலுக்கு தோசை வாங்க சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் சமையல் பணியில் இருந்த சிவா (25) என்பவர் கொத்து பரோட்டா தயாரித்த போது எழுந்து அதிக சத்தம் குறித்து சந்தனகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கோபத்தில் சந்தனகுமார் விளக்கு கட்டையால் சிவாவின் தலையில் அடித்துள்ளார். இதனால் காயமடைந்த சிவா தன் கையில் இருந்த கத்தியை பயன்படுத்தி சந்தனகுமாரை பலமுறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு தாக்குதலால் காயமடைந்த சிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய தகராறு உயிரிழப்பாக மாறியது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.