கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கரூர் சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் பரப்புரையின் போது வாய் பேச முடியாத இளைஞர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது 5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சைகை மொழியில் அந்த இளைஞர் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சைகை மொழியில் எச்சரித்த இளைஞர் ! சற்றுமுன் வெளியான புதிய வீடியோ#KarurStampede #VijayPolitics #TVK #thandoratamilan #karur #tvkvijay #JusticeForKarurVictims pic.twitter.com/PnNC793NSN
— Thandora Tamilan/தண்டோரா தமிழன் (@ThandoraTamilan) October 4, 2025
