கண்ணு தெரியாம வண்டிய ஓட்டுறியா?… காரை நொறுக்கிய லாரி… சுங்கச்சாவடியில் இளைஞர் ஆவேச ரகளை… இன்ஸ்டாவில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

By Swetha on ஐப்பசி 2, 2026

Spread the love

விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பண்டாங்கி சுங்கச்சாவடி அருகே, தங்களது கார் மீது லாரி மோதி சேதப்படுத்தியதாகக் கூறி இளைஞர் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் லாரி டிரைவரிடம் கடுமையாக ரகளையில் ஈடுபட்டார். தவறான பாதையில் அதிவேகமாக வந்த லாரி, காரை முந்திச் செல்ல முயன்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் முழுவதையும் வீடியோவாகப் பதிவுசெய்த அந்த இளைஞர், அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், லாரியின் தவறான பாதையிலான பயணமே விபத்தை ஏற்படுத்தியதாகவும், டிரைவரின் அலட்சியப் போக்கே காரின் சேதத்திற்கு முழு முதல் காரணம் என்றும் அவர் ஆவேசமாக வாதிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

   

https://twitter.com/TeluguScribe/status/2105649230933348821/video/1

   

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பண்டாங்கி சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு, போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் விபத்து ஏற்படுத்தியதற்காகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.