கண்டெய்னர் லாரி மீது மோதிய பைக்… துடிதுடித்து இறந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2026

Spread the love

பெங்களூரு ஊரக மாவட்டம் தேவனஹள்ளி அருகே உள்ள சாட்டிலைட் டவுன் ரிங் ரோட்டில் கண்டெய்னர் லாரியின் பின்புறம் பைக் பலமாக மோதிய விபத்தில், 27 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே கொடூரமாகப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவனஹள்ளி தாலுகா அவதி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சினப்பா என்பவரின் மகன் அருண் (27). இவர் வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலை 648-இல் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த அரியானா மாநிலப் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாகப் பைக் பலமாக மோதியுள்ளது.

   

இந்த கொடூர விபத்தில் அருண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தேவனஹள்ளி போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மெதுவாகச் சென்றதா, திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதா அல்லது பாதையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததா என்பது குறித்துச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் சாட்சிகளையும் ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.