“எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக்கூடாது”… பிரேக் அப் செய்த காதலி… அடுத்த நொடியே காதலன் செய்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காதல் தோல்வி காரணமாக 24 வயது இளைஞர் தன் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சோனு பராய் மற்றும் மனிஷா யாதவ் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மனிஷா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக சோனு சந்தேகித்ததால் எட்டு நாட்களுக்கு முன்பு மனுஷா காதலை முறித்துக் கொண்டதால் மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை சோனு மனிஷாவை ஒரு முதியோர் இல்லத்திற்கு அருகே சந்தித்து பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்.

அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சோனு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனிஷாவை கொடூரமாக குத்தி கொலை செய்தார். உடனடியாக அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டு அவரும் கற்பனை செய்து கொண்டார். உடனே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.