கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்திய இளைஞர் ஒருவர், மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேணஹள்ளி பகுதியைச் சேர்ந்த 30 வயதான சேத்தன் என்பவரே, தனது இல்லத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டவர் ஆவார்.
சேத்தனின் மனைவிக்கும், நாகராஜு என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இவர்களின் விவகாரம் சேத்தனுக்குத் தெரியவந்தது. தனது மனைவியைக் கண்டித்த சேத்தன், அந்தத் தொடர்பைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், சேத்தனின் பேச்சைப் பொருட்படுத்தாத மனைவி, நாகராஜுடனான தொடர்பைத் தொடர்ந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், மனைவியின் செல்போனில் இருந்த ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் நெருக்கமான புகைப்படங்களைக் கண்டு சேத்தன் கடும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக நாகராஜைத் தொடர்பு கொண்டு எச்சரித்தபோது, நாகராஜு அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், தனது கள்ளக்காதலியுடன் சண்டையிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் சேத்தனை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சேத்தன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளார். அதில் தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்தும், நாகராஜு விடுத்த மிரட்டல்கள் குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நாகராஜைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…