“சடலத்தை நாய்களுக்கு இரையாக்குங்கள்” என்னை மன்னிச்சிடுங்க அம்மா.. ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.. கண்ணீர் வரவழைக்கும் கடைசி கடிதம் சிக்கியது..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பொன்னபுரம் ரயில்வே கேட் அருகே சிரஞ்சீவி என்ற இளைஞர் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட சிரஞ்சீவிக்கு முன்னதாக பிறந்த நான்கு குழந்தைகளும் இறந்துவிட்டதால், ஐந்தாவதாகப் பிறந்த இவரைப் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் போராடி பெற்றோர் காப்பாற்றினர். இதனால் இவருக்கு ‘சிரஞ்சீவி’ எனப் பெயரிடப்பட்டது.

நந்தியால் என்ஜிஓ காலனியில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்த அவர், நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வறுமை மற்றும் குடும்பப் பொறுப்புகளைச் சரியாகச் சுமக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரை வாட்டியுள்ளது. தனது பெற்றோர் தன்னை வளர்க்கப் பட்ட கஷ்டங்களுக்குத் தன்னால் கைம்மாறு செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

   

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், “நான் என் பெற்றோருக்கு எந்த வகையிலும் உதவிகரமாக இருக்கவில்லை. எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். என் உடலை அவர்களிடம் கொடுத்து அவர்களை மேலும் சிரமப்படுத்த வேண்டாம்; என் பிணத்தை நாய்களுக்குப் போடுங்கள் அல்லது குப்பையில் வீசுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களையும் அங்கிருந்த மக்களையும் கண்ணீர் விடச் செய்தது. தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.