உங்களுக்கு இதுதான் வேலையா..? வசமாக சிக்கிய 47 வயசு சுபாஷினி, 21 வயசு சுந்தர்… பார்த்ததும் நடுங்கிப்போன காவல்துறை..!!

By Soundarya on பங்குனி 29, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தேவதானம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு பெண்ணையும், இளைஞரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த தனிப்படை போலீஸார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்தப் பெண் வாலாஜாபேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷினி (47) என்பதும், அவருடன் இருந்த இளைஞர் தேவதானம் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த சுந்தர் (21) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில், சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள 908 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றத்திற்காக அந்த மாத்திரைகளை போலீஸார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

   

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சுபாஷினியின் மகனும், சுந்தரின் சகோதரரும் ஏற்கனவே போதை மாத்திரை வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பது தெரியவந்தது. தற்போது சுந்தர் வேலூர் பகுதியிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சுபாஷினியிடம் கொடுத்து விற்பனை செய்ய முயன்றது உறுதியானது. இதனையடுத்து, சுபாஷினி மற்றும் சுந்தர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.