மகாராஷ்டிரா மாநிலம் தானே மேற்கு பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு போக்குவரத்து போலீசார் ஒரு ஸ்கூட்டியை ஓட்டி செல்கின்றனர். அவர்களை ஒரு வாலிபர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மற்றொரு வாலிபர் அதனை வீடியோ எடுத்துள்ளார். நம்பர் பிளேட் சரியாக இல்லாத வாகனத்தை நீங்கள் எப்படி ஓட்டி செல்லலாம் என அந்த வாலிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு போலீஸ்காரர் இது பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் என பதில் கூறுகிறார். அதற்கு பறிமுதல் செய்யப்பட வேண்டிய வாகனத்தை நீங்கள் எப்படி ஓட்டி செல்லலாம் என அந்த வாலிபர் கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள தானே காவல்துறை “வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நம்பர் பிளேட் இல்லாத அந்த ஸ்கூட்டி பற்றியும் விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
कधी कधी कायद्याचे ज्ञान असणारे लोक पोलिसांना भेटतात तेव्हा त्यांची अशी पळापळ होते
बाकी काय आणि कशी कारवाई झाली आहे हे सांगायची गरज नाही
बिचारा कॉलेज विद्यार्थी आहे @ThaneCityPolice
नी खोटी पोलिस केस नको करायला म्हणजे झाल #MumbraPolice #ThanePolice pic.twitter.com/MmYRt03sVL— मराठा Empire🚩 (@maratha_marathi) October 27, 2025
